வாசலை அடைத்தது யார்?

Published by Holy Way on

இன்றைய தியானம் 19/2/2020 Bishop. S. Crosswin

யோசுவா 2:7

தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது.


வாசல் ஏன் அடைக்கப்பட்டது? என்பதை நாளை தியானிப்போம்.
வாசலை அடைத்தது யார்? என்பதே இந்த நாளின் தியானம்.

  1. ராகாப் என்னும் பேர்கொண்ட வேசி (யோசுவா 2:1)
    மனிதர்களுக்கு வேசி என்று சொன்னதும் தவறான எண்ணங்கள் தோன்றுவது இயல்பு. ஆனால், கர்த்தர் யாரைக் கொண்டு வேண்டுமானாலும் தமது காரியத்தை நிறைவேற்றுவார். கழுதையைக் கொண்டு பிலேயாமோடே பேசினார். காகத்தை கொண்டு எலியாவைப் போஷித்தார். அவ்விதமே வேசியைக் கொண்டு தமது சித்தத்தை நிறைவேற்றினார்.

2. அவள் கீழ்படிந்தவள் (எபிரெயர் 11:31) கர்த்தர் கீழ்படிந்தவளைக் கொண்டு தமது திட்டத்தை செயல்படுத்தினார். எரிகோவின் ஜனங்கள் கீழ்படியாதவர்களாக இருந்தார்கள் என்று வாசிக்கிறோம். கர்த்தர் தமது ஜனத்தின் ஆசீர்வாதத்திற்காக, கீழ்படியாதவர்களை அழிக்க, அதே ஊரில் கீழ்படிந்தவளை உபயோகித்தார்.

3. விசுவாசித்தவள் (எபி.11:31)
ராகாப் கர்த்தரை விசுவாசித்தாள் என பார்க்கிறோம். கர்த்தர் மேல் உள்ள விசுவாசத்தினாலே வேவுகாரரை ஏற்றுக்கொண்டாள்.


ஆம், நீங்களும், நானும் இதுவரை எப்படிப்பட்டவர்களாக இருந்திருந்தாலும், கர்த்தர் தமது சித்தத்தை செய்ய நம்மைக் கொண்டு வாசலை அடைக்க விரும்புகிறார். பழைய வாழ்க்கையிலிருந்து மாறி, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிகிறவர்களாகவும், அவர் வார்த்தையில் விசுவாசம் வைக்கிறவர்களாகவும் மாறுவோம். கர்த்தருடைய சித்தம் நம் மூலமாக நிறைவேறும். ஆமென்.